Published : 10 Nov 2025 07:07 AM
Last Updated : 10 Nov 2025 07:07 AM

கொடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: துரைமுருகன் உறுதி

காட்​பாடி: தமிழக அமைச்சர் துரை​முரு​கன் வேலூர் மாவட்​டம் காட்​பாடி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கொட​நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவ​காரத்​தில் பூச்​சாண்​டிகளுக்கு அஞ்ச மாட்​டேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். தமிழக அரசு இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகும்.

கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அரசி​யல் ஆதா​யம் தேடு​வ​தாக தவெக தலை​வர் விஜய் விமர்​சித்​துள்​ளது வேடிக்​கை​யாக உள்​ளது. 41 பேர் உயி​ரிழப்​புக்கு காரண​மாக இருந்​து​விட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் வீடு​களுக்கு ஆறு​தல் செல்​லக்​கூட செல்​லாமல் இருந்​தவர் மனி​தாபி​மானம் உள்​ளவ​ரா? தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்த நாங்​கள் மனி​தாபி​மானம் இல்​லாதவர்​களா? இவ்​வாறு துரை​முரு​கன் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x