Published : 09 Nov 2025 10:39 AM
Last Updated : 09 Nov 2025 10:39 AM
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட் டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத் தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத் தின் 35 அடி மொத்த உயரத் தில் 33.75 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடி 2,745 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 2,600 கனஅடி மழைநீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 47 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீர்த்தேக் கத்தில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த விநாடிக்கு 400 கனஅடி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 22.55 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற் போது நீர்இருப்பு 3,261 மில் லியன் கனஅடியாக உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 650 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 165 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக் கப்படுகிறது. மேலும் ஏரியிலிருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 19.12 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற் போது நீர்இருப்பு 2,837 மில் லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 235 கனஅடியாக உள்ளது. இந் நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
காஞ்சி மாவட்டத்தில் கம்பக் கால்வாயில் இருந்து வரும் நீரால் பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், பரந்தூர், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரி யின் முழு கொள்ளளவான 25 அடியில் தற்போது 23 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் 300 கனஅடி நீர் அப்படியே கிளியாற்றில் வெளி யேற்றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT