Published : 08 Nov 2025 12:42 AM
Last Updated : 08 Nov 2025 12:42 AM

4 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: தமிழகத்​தில் நெல்லை உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.8) சில இடங்​களி​லும், நாளை முதல் வரும் 13-ம் தேதிவரை தென் தமிழகத்​தில் சில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று கன்​னி​யாகுமரி, நெல்லை, தென்​காசி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களி​லும், நாளை நெல்லை மாவட்ட மலைப் பகு​தி​கள் மற்​றும் கன்னியாகுமரி மாவட்​டத்​தி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x