Published : 08 Nov 2025 12:38 AM
Last Updated : 08 Nov 2025 12:38 AM

போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன.2-ல் வைகோ நடைபயணம் தொடக்கம்

சென்னை: போதைப் பொருட்​கள் பயன்​பாட்டை எதிர்த்து பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் திருச்​சி​யில் இருந்து மதுரை வரை ஜன. 2-ம் தேதி மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நடைபயணம் தொடங்​கு​கிறார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்​குரிமை​யைப் பறிக்​கும் முயற்சிக்கு எதிராக நவ.11-ல் அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் நடைபெறும் கண்டன ஆர்ப்​பாட்​டத்தில், மதி​முகபெரு​மள​வில் பங்​கேற்​கும். தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஜன.2-ம்தேதி திருச்​சி​யில் இருந்து நடைபயண​மாக புறப்​பட்டு மணப்​பாறை, திண்​டுக்​கல் வழி​யாக ஜன.12-ம் தேதி மதுரையை அடைந்து எங்​களது பயணத்தை நிறைவு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x