Published : 07 Nov 2025 06:58 AM
Last Updated : 07 Nov 2025 06:58 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை

மறைமலை நகர்: பகுஜன் சமாஜ் கட்சி முன்​னாள் மாநிலத் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்​னை​யில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில், 27 பேருக்​கும் மேல் கைது செய்​யப்​பட்​டு, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், ‘வழக்கு விசா​ரணையை தமிழக போலீஸ் நியாய​மாக மேற்​கொள்​ள​வில்​லை. எனவே ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்​டும்’ என கோரி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் இமானுவேல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்ற உத்​தர​விட்​டது. மேலும், வழக்கு தொடர்​பான ஆவணங்​கள் அனைத்​தை​யும் உடனடி​யாக சிபிஐ வசம் ஒப்​படைக்​கும்​படி தமிழக போலீஸுக்கு உத்​தர​விட்​டது. ஆனால் இன்​னும் சிபிஐ வசம் ஒப்​படைக்​க​வில்​லை.

இந்​நிலை​யில் ஆம்​ஸ்ட்​ராங் படு​கொலை பின்​னணியில் யார் இருக்கிறார்கள்? சிபிஐ விசா​ரணைக்கு குறுக்​கீடு ஏன்? நீதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்​பில் மறைமலை நகர் பாவேந்​தர் சாலை​யில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு மகளிர் அணி நிர்​வாகி ஜெயந்தி தலைமை தாங்​கி​னார். ஏராள​மானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசை கண்​டித்து கண்டன கோஷங்​களை எழுப்பினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x