Published : 07 Nov 2025 06:24 AM
Last Updated : 07 Nov 2025 06:24 AM

கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 80 பேர் மீது வழக்கு

சென்னை: கடலில் இறங்கி போராட்​டம் நடத்​திய தூய்மை பணி​யாளர்​கள் 80 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட ராயபுரம், திரு.​வி. நகர் ஆகிய மண்​டலங்​களில் தூய்மை பணி தனி​யார் வசம் ஒப்​படைக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், பழைய நிலை​யில் பணி வழங்​கக் கோரி​யும், தூய்மை பணி​யாளர்​கள் 50 பெண்​கள் உள்பட 80 பேர் நேற்று கண்​ணகி சிலை பின்​புறம் மெரினா கடலில் இறங்கி போராட்​டம் நடத்​தினர்.

தகவல் அறிந்து திரு​வல்​லிக்​கேணி துணை ஆணை​யர் ஜெயச்​சந்​திரன் தலை​மை​யில், 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட அனை​வரை​யும் கைது செய்​தனர். பின்​னர், மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில், தடையை மீறி போராட்​டம் நடத்​திய தூய்மை பணி​யாளர்​கள் 80 பேர் மீது 2 பிரி​களின் கீழ், அண்​ணாசதுக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x