Published : 07 Nov 2025 06:04 AM
Last Updated : 07 Nov 2025 06:04 AM

தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்

சென்னை: தேனாம்​பேட்டை டிஎம்​எஸ் வளாகத்​தில் இயங்கி வந்த தொழிலா​ளர் நல ஆணை​யரகம், அண்ணாநகருக்கு இடமாற்​றம் செய்​யப்பட உள்ளது.

இது தொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தொழிலா​ளர் நல ஆணை​யரகம் மற்​றும் அதன் சார்​நிலை அலு​வல​கங்​களுக்கு அண்ணா நகர் 6-வது நிழற்​சாலை, தொழிலா​ளர் அலு​வலர் குடி​யிருப்பு வளாகம் பி-பிளாக்​கில் புதிய கட்​டிடம் கட்​டப்​பட்​டது. அக்​கட்​டிடத்தை முதல்​வர் ஸ்டா​லின் கடந்த ஆக. 25-ம் தேதி திறந்து வைத்​தார்.

இந்​நிலை​யில் தேனாம்​பேட்​டை, டி.எம்​.எஸ் வளாகத்​தில் செயல்​பட்டு வரும் தொழிலா​ளர் நல ஆணை​யர் அலு​வல​கம், கூடு​தல் தொழிலா​ளர் ஆணையர் அலு​வல​கம், தொழிலா​ளர் இணை ஆணை​யர்-1 அலு​வல​கம், தொழிலா​ளர் இணை ஆணை​யர்-2 அலு​வல​கம் ஆகியவை அண்ணா நகர் புதிய கட்டிடத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்பட உள்​ளன. அந்த அலு​வல​கங்​கள் வரும் 10-ம் தேதி முதல் புதிய இடத்​தில் செயல்​படும்.

எனவே, தொழிலா​ளர் நல அலு​வல​கங்​களில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பணி​களுக்​காக வருகை புரி​யும் பொது​மக்​கள், வழக்​கறிஞர்​கள், தொழிற்​சங்​கப் பிர​தி​நி​தி​கள் வரும் 10-ம் தேதி முதல் புதிய அலு​வலக வளாகத்தை அணுகு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறார்​கள் என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x