Published : 06 Nov 2025 05:45 AM
Last Updated : 06 Nov 2025 05:45 AM

அனிமேஷன் துறைக்கு விரைவில் புதிய கொள்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்​ஸ், கேமிங் மற்​றும் காமிக்ஸ் துறை​யின் வளர்ச்​சிக்​காக புதிய கொள்கை விரை​வில் வெளி​யிடப்​படும் என தமிழக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். கேம் டெவலப்​பர் அசோசி​யேஷன் ஆஃப் இந்​தியா சார்​பில் 17-வது இந்​திய கேம் டெவலப்​பர்​களுக்​கான மாநாடு சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது. தமிழகத்​தில் முதல்​முறை​யாக நடத்​தப்​படும் இந்த மாநாட்டை தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தொடங்கி வைத்​தார்.

3 நாட்​கள் நடை​பெறும் மாநாட்​டில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பங்​கேற்​பாளர்​கள், 350-க்​கும் மேற்​பட்ட தொழில்​நுட்ப வல்​லுநர்​கள் பங்​கேற்​கின்​றனர். 75 அரங்​கு​கள், 150-க்​கும் மேற்​பட்ட அமர்​வு​களுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இம்​மா​நாட்​டில் அமைச்​சர் பேசி​ய​தாவது: செயற்கை நுண்​ணறி​வின் (ஏஐ) வளர்ச்​சி​யால் வழக்​க​மான தகவல் தொழில்​நுட்​பப் பணி​கள் குறைந்து வரும் சூழலில், புத்​தாக்​கம் மற்​றும் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களின் வளர்ச்சி பன்​மடங்கு அதி​கரித்​துள்​ளது. இந்த அரசு பொறுப்​பேற்ற கடந்த நான்​கரை ஆண்​டு​களில், பதிவு செய்​யப்​பட்ட ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களின் எண்​ணிக்கை 2 ஆயிரத்​தில் இருந்து 11 ஆயிர​மாக (600 சதவீதம்) உயர்ந்​துள்​ளது. இதில் சரி​பாதி பெண்​கள் தலை​மையி​லானவை. இதுவே புத்​தாக்க வளர்ச்​சிக்​கான சாட்​சி.

இந்த வளர்ச்​சியை மேலும் வலுப்​படுத்த அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்​ஸ், கேமிங், மற்​றும் காமிக்ஸ் துறைக்​கென ஒரு புதிய விரி​வான கொள்​கையை உரு​வாக்​கும் பணி​யில் 2 ஆண்​டு​களாக தமிழக அரசு ஈடு​பட்டு வரு​கிறது. இந்​தக் கொள்​கை​யின் 99 சதவீத அம்​சங்​கள், தொழில்​துறை​யினரின் ஆலோ​சனை​கள் மற்​றும் அவர்​களின் முன்​னுரிமை​களின் அடிப்​படை​யிலேயே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி பள்ளி முதல் பல்​கலைக்​கழகங்​கள் வரை பாடத்​திட்​டங்​களை மாற்றி கேமிங் வடிவ​மைப்​பு, புரோகி​ராமிங், அனிமேஷன் போன்​றவற்​றுக்​குத் தேவை​யான திறன்​களை மாணவர்​களிடையே உரு​வாக்​குதல், நிறு​வனங்​களுக்​குத் தேவை​யான ஊக்​கத்​தொகைகள், மானி​யங்​கள் வழங்​குதல் மற்​றும் ஒற்​றைச் சாளர அனு​மதி போன்ற வசதி​கள் மூலம் தொழில் தொடங்​கு​வதற்​கும், நடத்​து​வதற்​கும் உள்ள நடை​முறை​களை எளிமை​யாக்​குதல் ஆகியவை முக்​கிய தூண்​களாகும்.

புகழ்​பெற்ற நிண்​டெண்டோ நிறு​வனம் முதல்​முறை​யாக இந்த மாநாட்​டில் கலந்​து​கொண்​டுள்​ளது. அவர்​களை தமிழகத்​தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்​துள்​ளோம். பப்ஜி போன்ற கேம்​களை உரு​வாக்​கிய கிராஃப்​டான் நிறு​வனம் ஏற்​கெனவே பெங்​களூரு​வில் உள்ள தங்​களது மையத்​தில் 10 ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களுக்​குப் பயிற்சி அளிக்​கிறது, அதில் ஒன்று மதுரையைச் சேர்ந்த நிறு​வனம்.

இது​போன்ற உலகளா​விய நிறு​வனங்​கள் தங்​களது உலகளா​விய திறன் மையங்​களை தமிழகத்​தில் அமைக்க வேண்​டும் என்​பதே எங்​கள் இலக்​கு. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்​வில் தகவல் தொழில் ​நுட்​பத் துறை செயலர் பிரஜேந்​திர நவ்​னித், கேம் டெவலப்​பர் அசோசி​யேஷன் ஆஃப் இந்​தியா தலை​வர் தர் முப்​பிடி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x