Published : 06 Nov 2025 06:55 AM
Last Updated : 06 Nov 2025 06:55 AM

ஹூக்கா பார்கள் மீதான தடையை நீக்கக் கூடாது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் சமீபத்​திய தீர்ப்​பு​களில் பார் உரிமை​யாளர்​கள் தாங்​கள் விற்​பனை செய்​வது புகை​யிலை அல்​லது நிக்​கோடின் சேர்க்​காத மூலிகை ஹூக்கா என்​பதை நிரூபிக்க முடிந்​தால், அவர்​கள் தொடர்ந்து அவற்றை வழங்​கலாம் என்று சுட்​டிக் காட்​டி​யுள்​ளன. அதே​போல், மூலிகை ஹூக்​காவைப் பயன்​படுத்த அனு​ம​திப்​ப​தற்​கான ஒரு நிலை​யான இயக்க நடை​முறையை (எஸ்​ஒபி) உரு​வாக்​கு​மாறு மாநில அரசுக்கு உயர்​நீ​தி​மன்​றம் வாய்​மொழி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

புகை​யிலை, நிக்​கோடின் அல்​லது தீங்கு விளைவிக்​கும் பொருட்​கள் எது​வும் மூலிகை ஹூக்கா​வுடன் கலக்​கப்​பட​வில்லை என்​பதை உறுதி செய்ய அதி​காரி​கள் ஆயிரக்​கணக்​கான விற்​பனை நிலை​யங்​களைத் கண்​காணிப்​பது கடினம். மூலிகை ஹுக்கா​வுக்​கான எஸ்​ஒபி வகுக்கும் எந்​தவொரு நடவடிக்​கை​யும் தமிழகத்​தில் புகை​யிலை தடை​யின் வீரி​யத்தை குறைக்​கும்.

சிகரெட் மற்​றும் பிற புகை​யிலை பொருட்​கள் சட்​டத்​தில் திருத்​தம் மூலம் அனைத்து ஹுக்கா பார்​களை​யும் தமிழக அரசு தடை செய்​திருக்​கும் நிலை​யில், மூலிகை மற்​றும் புகை​யிலை ஹுக்கா​வுக்கு இடை​யில் பெறும் வேறு​பாடு உள்​ளது என்​பது ஏற்​கத்​தக்​கது அல்ல. இரண்​டும் புகைபிடிக்​கும் கலாச்​சா​ரத்தை ஊக்​கு​வித்து நிக்​கோடின் பயன்​பாட்​டுக்கு வழி​வகுக்​கின்​றன. எனவே, அனைத்து வகை​யான ஹூக்கா தடையை தொடர்​வதை தமிழக முதல்​வர் உறுதி செய்ய வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x