Published : 06 Nov 2025 06:11 AM
Last Updated : 06 Nov 2025 06:11 AM

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல்​ நிலையத்தை 3 வாரங்களில்​ அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்​னை: நீர்​நிலைகளை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்ள செம்​மஞ்​சேரி காவல் நிலை​யத்தை 3 வாரங்​களில் அங்​கிருந்து அகற்​றா​விட்​டால் நாங்​களே நடவடிக்கை எடுப்​போம் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அறப்​போர் இயக்​கம் சார்​பில் அதன் ஒருங்​கிணைப்​பாளர் ஜெய​ராம் வெங்​கடேசன் கடந்த 2019-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனு​வில், “தாமரைக்கேணி என்ற ஏரியை ஆக்​கிரமித்து செம்​மஞ்​சேரி காவல் நிலை​யத்தை நீர்​நிலைப் பகு​தி​யில் பல லட்​சம் ரூபாய் செல​வில் கட்​டி​யுள்​ளனர்​.

இதன் மூலம் அரசுப் பணம் வீணடிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த கட்​டு​மானத்​துக்கு சிஎம்​டிஏ ஒப்​புதலும் பெற​வில்​லை. எனவே நீர்​நிலை​யில் கட்​டப்​பட்​டுள்ள இந்த காவல் நிலை​யத்தை அங்​கிருந்து அப்​புறப்​படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கை கடந்த செப்​டம்​பர் மாதம் விசா​ரித்த தலைமை நீதிபதி எம்.எம். வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர், செம்​மஞ்​சேரி காவல் நிலை​யத்தை வேறு பகு​திக்​கு இடமாற்​றம்​ செய்​வது குறித்​து அரசு பதிலளிக்​க வேண்​டும்​ என உத்​தர​விட்​டிருந்​தனர்​.

இந்​நிலை​யில்​ இந்​த வழக்​கு நேற்​று மீண்​டும்​ வி​சா​ரணைக்​கு வந்​தது. அப்​போது அரசுத்​ தரப்​பில், “செம்​மஞ்​சேரி காவல்​ நிலை​யத்​தை இடமாற்​றம்​ செய்​ய 6 வாரம்​ அவகாசம்​ வழங்​க வேண்​டும்​” என கோரப்​பட்​டது. ஆனால்​ அதையேற்​க மறுத்​த நீதிப​தி​கள்​, “அந்​த காவல்​ நிலை​யத்​தை 3 வாரங்​களுக்​குள்​ அங்​கிருந்​து அகற்​றா​விட்​டால்​ நாங்​களே நடவடிக்​கை எடுப்​போம்​” எனக்​ கெடு வி​தித்து எச்​சரித்​து, வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x