Published : 05 Nov 2025 05:55 AM
Last Updated : 05 Nov 2025 05:55 AM

சென்னை | 9 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை: மதுர​வாயல் அடுத்த மேட்​டுக்​குப்​பம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்​தவர் சபா​நாயகம் (38). இவரது மகன் லக்​சன் (9). அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்ளி ஒன்​றில் 5-ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

நேற்று வீட்​டிலிருந்து அரு​கில் உள்ள கடைக்கு சென்ற போது, தெரு​வில் சுற்றி திரிந்து கொண்​டிருந்த நாய் ஒன்று சிறு​வன் லக்​சனை கடித்து குதறியது.

இதில், சிறு​வனுக்கு முதுகு மற்​றும் வலது கை, தோள்​பட்​டை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அலறல் சத்​தம் கேட்டு அங்​கிருந்​தவர்​கள் ஓடி வந்து சிறு​வனை மீட்டு சிகிச்​சைக்​காக போரூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்து அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x