Published : 05 Nov 2025 06:28 AM
Last Updated : 05 Nov 2025 06:28 AM
சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் திண்டிவனம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், தாம்பரம் - விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் இன்று (நவ.5) மற்றும் நவ.8-ம் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: தாம்பரம் - விழுப்புரத்துக்கு நவ. 5, 8 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில், ஒலக்கூர் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு மேற்படி நாட்களில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு பாசஞ்சர் ரயில், விழுப்புரம் - ஒலக்கூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT