Published : 04 Nov 2025 06:24 AM
Last Updated : 04 Nov 2025 06:24 AM

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ரியாஸ், ரிஸ்வான் ஆகியோரின் பெற்றோருக்கு நேற்று அமைச்சர் சா.மு.நாசர் ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். உடன், ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர்.

திரு​வள்​ளூர்: கடல் மற்​றும் கோயில் குளத்​தில் மூழ்கி உயி​ரிழந்த, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த 4 பெண்​கள், 2 குழந்​தைகளின் குடும்​பங்​களுக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.3 லட்​சத்தை நேற்று அமைச்​சர் சா.​மு.​நாசர் வழங்​கி​னார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்ள தனி​யார் துணிக்​கடை ஊழியர்​களான, கும்​மிடிப்​பூண்​டி- பெத்​திக்​குப்​பத்​தில் உள்ள இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு முகாமைச் சேர்ந்த தேவகி (30), தேர்​வழியைச் சேர்ந்த காயத்ரி (18), பெரியஓபுளாபுரத்​தைச் சேர்ந்த ஷாலினி (18), பொன்​னேரி அருகே கோளூரைச் சேர்ந்த பவானி (19) ஆகியோர் கடந்த அக். 31-ம் தேதி எண்​ணூர், பெரியகுப்​பம் பகு​தி​யில் கடலில் குளித்​துக் கொண்​டிருந்​த​போது, கடல் அலை​யில் சிக்​கி, நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

திரு​வேற்​காடு அருகே உள்ள அயனம்​பாக்​கம், மகாத்மா காந்தி நகர்- பொன்​னி​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர்​கள் தமீம் அன்​சாரி என்​கிற தமிழரசு (32)- வசந்​தி (26) தம்​ப​தி. இத்​தம்​ப​தி​யின் குழந்​தைகளான ரியாஸ் (5), ரிஸ்​வான் (3) ஆகியோர் கடந்த 1-ம் தேதி வீட்​டின் அருகே உள்ள பொன்​னி​யம்​மன் கோயில் குளத்​தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

இவர்​களின் குடும்​பத்​துக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.3 லட்​சம் வழங்க ஏற்​கெனவே தமிழக முதல்வர் ஸ்​டா​லின், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார். அதன் அடிப்​படை​யில், கடலில் மூழ்கி உயி​ரிழந்த 4 பெண்களின் குடும்​பங்​களுக்கு அமைச்​சர் சா.​மு.​நாசர் நேற்று கும்​மிடிப்​பூண்டி வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆறு​தல் கூறி, முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.3 லட்​சம் வீதம், ரூ.12 லட்​சத்​துக்​கான காசோலைகளை வழங்​கி​னார்.

கோயில் குளத்​தில் மூழ்கி உயி​ரிழந்த ரியாஸ், ரிஸ்​வான் ஆகியோரின் பெற்​றோருக்கு நேற்று திரு​வேற்​காடு நகராட்சி அலு​வல​கத்​தில் அமைச்​சர் ஆறு​தல் கூறி, முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.3 லட்​சம் வீதம், ரூ.6 லட்​சத்​துக்​கான காசோலைகளை வழங்​கி​னார். இந்​நிகழ்​வு​களின்​போது, திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் பிர​தாப், பொன்​னேரி சார் ஆட்​சி​யர் ரவி​கு​மார், கும்​மிடிப்​பூண்டி வட்​டாட்​சி​யர் சுரேஷ்கு​மார், எம்​எல்ஏ டி.ஜெ.கோ​விந்​த​ராஜன், திரு​வேற்​காடு நகராட்சி தலை​வர் என்​.இ.கே.மூர்த்​தி, ஆணை​யர் ராமர்.

பூந்​தமல்லி வட்​டாட்​சி​யர் உதயம் உடனிருந்​தனர். மேலும், கும்​மிடிப்​பூண்டி - பெத்​திக்​குப்​பம் இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு முகாமில் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் 198 வீடு​களின் கட்​டு​மான பணி​கள், சாலை, மழைநீர் வடி​கால்​வாய்​கள் அமைக்​கும் பணி​கள் தொடர்பாக அமைச்​சர் சா.​மு.​நாசர் பார்​வை​யிட்​டு, ஆய்​வுசெய்​து, சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்​கு உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x