Published : 04 Nov 2025 05:54 AM
Last Updated : 04 Nov 2025 05:54 AM
சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: போதை கலாச்சாரம் இத்தகைய கொடூரங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவல்துறையின் தொடர் கண்காணிப்பும், சட்டங்கள் மூலம் கடுமையான தண்டனைகளும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங் களைத் தடுக்க முடியும்.
தேமுதிக பொதுச்செய லாளர் பிரேமலதா விஜயகாந்த்: பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்.
அமமுக பொதுச்செயலா ளர் டிடிவி தினகரன்: இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சியில் சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, இதுபோன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. பாலியல்குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ திமுக ஆட்சி தவறிவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT