Published : 03 Nov 2025 06:16 PM
Last Updated : 03 Nov 2025 06:16 PM

சான்றிதழ்களை வழங்காமல் தேர்வுத் துறை அலைக்கழிப்பு: மாணவர்கள், பெற்றோர் குற்றச்சாட்டு

மறு​பிரதி உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் கோரி விண்​ணப்​பித்​தவர்​களை தேர்​வுத் துறை அலு​வலர்​கள் மாதக்​கணக்​கில் அலைக்​கழிப்​ப​தாக மாணவர்​கள், பெற்​றோர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் இயங்​கும் தேர்​வுத் துறை இயக்​குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள், கல்வி உதவித்​தொகை தேர்​வு​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்சி பட்​டயப் படிப்​புக்​கான ஆண்​டுத் தேர்​வு​களை நடத்​திவரு​கிறது. பொதுத் தேர்​வுக்​கான மதிப்​பெண் சான்​றிதழ்​களை​யும் இயக்​குநரகமே அச்​சிட்டு விநியோகம் செய்​கிறது.

அசல் சான்​றிதழ்​களை இழந்த மாணவர்​களுக்கு மறு​பிர​தி, மதிப்​பெண் சான்​றிதழ்​களின் சான்​றிட்ட நகல், புலப்​பெயர்ச்​சிக்​கான சான்​றிதழ் ஆகிய​வற்றை பெற தேர்​வுத் துறைக்கு நேரில் வந்து விண்​ணப்​பித்து பெறும் நடை​முறை கடந்த ஆண்​டு​களில் இருந்​தது. ஆனால், இவ்​வாறு விண்​ணப்​பித்​தவர்​களுக்கு மறு​பிரதி சான்​றிதழ் ஆண்​டுக்​கணக்​கில் வழங்​கப்​ப​டா​மல் தாம​திக்​கும் நிலை இருந்​தது.

இதற்கு தீர்வு காணும் வித​மாக, இணை​யதளம் வழி​யாக விண்​ணப்​பிக்​கும் நடை​முறையை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் 2023-ல் அறி​முகம் செய்​தார். இதன்​பிறகு, ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தவர்​களுக்கு 2 மாதங்​களில் சான்​றிதழ்​கள் கிடைத்து வந்​தன. இந்​நிலை​யில், தேர்​வுத் துறை​யின் செயல்​பாடு​கள் மீண்​டும் மந்​த​மாக நடை​பெறு​வ​தால் மறு​பிரதி கேட்டு விண்​ணப்​பிக்​கும் நபர்​கள் மாதக்​கணக்​கில் அலைக்​கழிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட மாணவர்​கள், பெற்​றோர்​கள் கூறிய​தாவது: நாங்​கள் மறு​பிரதி சான்​றிதழ் கேட்டு விண்​ணப்​பித்து 10 மாதங்​கள் ஆகி​யும் சான்​றிதழ் கிடைக்​க​வில்​லை. நேரில் வந்​தா​லும் அலு​வலர்​கள் உரிய பதில் அளிக்​காமல் அலைக்​கழிக்​கின்​றனர். 3 நாட்​களில் வழங்க வேண்​டிய புலப்​பெயர்ச்சி சான்​றிதழ்​களை சிலவாரங்​கள் வரை இழுத்​தடிக்​கின்​றனர். தின​மும் நூற்​றுக்​கணக்​கான மாணவர்​கள் இயக்​குநரகம் வந்து புலம்​பிச் செல்​வதை கண்​கூ​டாக பார்க்​கிறோம்.

இதனால், அரசு வேலை, உயர்​கல்​வி, வெளி​நாட்டு பயணம் மேற்​கொள்ள திட்​ட​மிடும் மாணவர்​கள் மிக​வும் அவதிக்​குள்​ளாகின்​றனர். தேர்​வுத் துறை​யின் இந்த மெத்​தனப்​போக்​கை, பள்​ளிக்​கல்​வித் துறை உடனே சரிசெய்ய வேண்​டும். விண்​ணப்​பிக்​கும் மாணவர்​களுக்கு மறு​பிரதி உள்​ளிட்ட சான்​றிதழ்​களை உடனுக்​குடன் வழங்க நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x