Published : 03 Nov 2025 06:56 AM
Last Updated : 03 Nov 2025 06:56 AM

உலகின் பசியைப் போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்டு கமல்ஹாசன் புகழாரம்

எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த ‘தி மேன் ஹூ ஃபெட் இந்தியா’ நூல் வெளியீட்டு விழா, சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நூலை வெளியிட்டார். அருகில், நூல் ஆசிரியர் பிரியம்பதா ஜெயகுமார். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: இந்​தியா மட்​டுமின்​றி, உலகின் பசி​யையே போக்க பங்​காற்​றிய​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மறைந்த வேளாண் விஞ்​ஞானி எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் வாழ்க்கை வரலாற்றை ‘தி மேன் ஹு ஃபெட் இந்​தி​யா’ (The Man Who Fed India) என்ற தலைப்​பில் பிரி​யம்​பதா ஜெயகு​மார் எழு​தி​யுள்​ளார்.

இந்த நூல் வெளி​யீட்டு விழா, சென்னை தரமணி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பங்​கேற்​றார். மநீம தலை​வர் கமல்​ஹாசன், நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் இந்​தி​யா​வின் பசி​யைப் போக்​கிய​வர் என்று மட்​டுமே கூறி​விட முடி​யாது. அவர் உலகத்​தின் பசி​யைப் போக்க பங்​காற்​றிய​வர். கடந்த 2,000 ஆண்​டு​களுக்கு முன்பு அன்​ன​வாசல் என்ற பெயரில் ஜைனர்​கள் உணவு வழங்​கினர்.

ஆனால், அறி​வியல் ரீதி​யாக இந்​தி​யாவை அன்​ன​வாசலாக மாற்றிய​வர் சுவாமி​நாதன். ‘இந்​தி​யா​வில் பசி​யைப் போக்க முடி​யாது, உணவுத் தேவை​யில் இந்​தியா தன்​னிறைவு அடைய முடி​யாது’ என்று பலர் கூறினர். தொடர் பஞ்​சத்​தின்​போது இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா கோதுமை வழங்​கியது.

அந்த நாட்​டில் தகு​தி​யற்​ற​தாக பார்க்​கப்​பட்ட அந்த கோதுமை நமக்கு நன்மை தரக்​கூடிய​தாக இருந்​தது. இது உதவி என்ற பெயரில் நமக்கு கொடுக்​கப்​பட்ட அவமானம். இந்த அவமானத்தை நீக்​கி, உணவுப் புரட்​சியை ஏற்​படுத்​தி​ய​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் மற்​றும் விஞ்​ஞானி நார்​மன் பார்லா ஆகியோ​ருக்கு முக்​கிய பங்கு உண்​டு.

எடை குறை​வான நெல்லை இவர்​கள் கண்​டு​பிடித்​தனர். உணவுப் பாது​காப்​பு​தான் தேசியப் பாது​காப்பு என்​பதை ஒரு சிலரே உணர்ந்​தனர். நாம் உணவு உற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடை​யா​விட்​டால் ஒரு​போதும் காலனித்​துவ சக்​தி​களுக்கு எதி​ராக நிற்க முடி​யாது என்​பதை சுவாமி​நாதன் புரிந்​து​கொண்​டார்.

அவர் இல்​லாமல், இந்​தியா தனது சொந்த விருப்​பங்​களைத் தேர்ந்​தெடுக்​கும் கொள்கை சுதந்​திரத்தை பெற்​றிருக்க முடி​யாது. சுவாமி​நாதனின் வாழ்க்​கையே ஒரு பாடம். அந்த பாடத்தை உலகத்​துக்கு எடுத்​துச் செல்​லும் தூது​வன் நான். இவ்​வாறு அவர் பேசி​னார். எம்​.எஸ்​. சு​வாமி​நாதனின் மகளும், உலக சுகா​தார நிறு​வனத்தின் முன்​னாள் தலைமை விஞ்​ஞானி​யு​மான சவுமியா சுவாமி​நாதன்​ மற்​றும்​ குடும்​ப உறுப்​பினர்​கள்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x