Published : 03 Nov 2025 06:03 AM
Last Updated : 03 Nov 2025 06:03 AM

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில்

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயில் மண்டல பூஜை, மகர​விளக்கு பூஜையை முன்​னிட்​டு, தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பக்தர்​கள் செல்​வார்​கள். சென்​னை​யில்இருந்து சபரிமலை செல்​லும் பக்​தர்​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​கள் இயக்கப்படுகின்றன.

அதன்​படி, சென்னை எழும்​பூரில் இருந்து நவ.14 முதல் 2026 ஜன.16-ம் தேதி வரை ஒவ்​வொரு வெள்​ளிக்​கிழமை​யும் இரவு 11.55 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06111) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 4.30 மணிக்கு கொல்​லம் சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, கொல்​லத்​தில் இருந்து நவ.15 முதல் ஜன.17-ம் தேதி வரை ஒவ்​வொரு சனிக்​கிழமை​யும் இரவு 7.35 மணிக்கு புறப்​படும் வாராந்​திர சிறப்பு ரயில் (06112), மறு​நாள் நண்​பகல் 12 மணிக்கு எழும்​பூர் வந்​தடை​யும்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து நவ.16 முதல் ஜன.18-ம் தேதி வரை ஒவ்​வொரு ஞாயிறும் இரவு 11.50 மணிக்கு புறப்​படும் வாராந்​திர சிறப்பு ரயில் (06113), மறு​நாள் மாலை 4.30 மணிக்கு கொல்​லம் சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, கொல்​லத்​தில் இருந்து நவ.17 முதல் ஜன.19-ம் தேதி வரை ஒவ்​வொரு திங்​கள்​கிழமை​யும் மாலை 6.30 மணிக்கு புறப்​படும் வாராந்​திர சிறப்பு ரயில் (06114), மறு​நாள் பகல் 11.30 மணிக்கு சென்னை சென்ட்​ரல் வந்​தடை​யும்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து நவ.19 முதல் ஜன.21-ம் தேதி வரை ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் பிற்​பகல் 3.10 மணிக்கு புறப்​படும் வாராந்​திர சிறப்பு ரயில் (06119), மறு​நாள் காலை 6.40 மணிக்கு கொல்​லம் சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, கொல்​லத்​தில் இருந்து நவ.20 முதல் ஜன.22-ம் தேதி வரை ஒவ்​வொரு வியாழக்​கிழமை​யும் காலை 10.40 மணிக்கு புறப்​படும் வாராந்​திர சிறப்பு ரயில் (06120), மறு​நாள் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்​ரல் வந்​தடை​யும்.

இதுத​விர, சென்னை சென்ட்​ரல் - கொல்​லம் இடையே 2 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன. மேற்​கண்ட சிறப்பு ரயில்​களுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு நாளை (நவ.4) காலை 8 மணிக்​கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x