Published : 03 Nov 2025 07:19 AM
Last Updated : 03 Nov 2025 07:19 AM
ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காங்கிரஸிடம் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும். ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும் ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும். கரூர் பெருந்துயர சம்பவத்தில் மாவட்ட
நிர்வாகத்துக்கும், நிகழ்ச்சி நடத்தியோருக்கும்பெரும் பங்கு உண்டு. இதற்குதனி ஒருவர் மட்டும் காரணம் அல்ல தேர்தலை காரணமாக வைத்து தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி மீண்டும் ஒருபொய்யை சொல்லி இருக்கிறார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இன்றி இங்கு பல வேலை நடக்காது என, நமக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் அவர்களுக்கு எந்த நெருடலும் இல்லை. அதனால்தான் உத்திரபிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு
வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். இங்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் உள்ளது.
இந்தியாவிலேயே தூய்மையற்ற நகரம் பட்டியலில் மதுரை முதலிடம் பெறுவது வேதனை அளிக்கிறது ‘ ஸ்வச் பாரத் ’ தூய்மையான நகரங்களில் டாப் 50ல் ஒரு நகரம் கூட தமிழகத்தை சேர்ந்ததல்ல. குறிப்பாக பொது இடங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை மிக குறைவு. இதில் அரசை தவறு சொல்ல முடியாது.
வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்குவது, எந்த விசாரணையுமின்றிசிலரை சேர்ப்பது போன்றவை நடப்பதாக குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கவேண்டும்.தமிழகத்திற்கு வேலைக்கு என வருவோரை வாக்காளராக மாற்றுவதை ஒருநாளும் ஏற்க முடியாது. அதிமுகவில் எல்லா சோதனைகளையும், வெற்றிகளையும் கண்டவர் செங்கோட்டையன். அவரை கட்சியில் இருந்து நீக்கியது வேதனை. பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்கும் முகம்தான். கட்சி கீழ் நோக்கியே செல்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT