Published : 02 Nov 2025 07:14 AM
Last Updated : 02 Nov 2025 07:14 AM

செங்கோட்டையன் பதவியை ஜெயலலிதா பறித்தது ஏன்? - திண்டுக்கல் சீனிவாசன் புதுத் தகவல்

சசிகலா, டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ், செங்​கோட்​டையனை மீண்​டும் அதி​முக​வில் சேர்க்க வேண்​டிய அவசி​யம் இல்லை என்று அதி​முக பொருளாளர் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து மதுரை​யில் அவர் கூறிய​தாவது: ஜெயலலி​தா​வால் கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​தான் டிடி​வி.​தினகரன். அவர் அதி​முகவை பற்றி சொல்​வதற்​கெல்​லாம் நாங்​கள் பதில் சொல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை. பழனி​சாமிக்கு முன்​பாக பிறந்​துள்​ளவர் என்ற ஒரு தகு​தியை மட்​டும் செங்​கோட்​டையன் பெற்​றுள்​ளார். அதை தவிர மற்ற அனைத்து தகு​தி​களை​யும் பழனி​சாமி பெற்​றுள்​ளார், செங்​கோட்​டையன் முதல்​வர் வாய்ப்பை 2 முறை விட்​டுக்​கொடுத்​துள்​ள​தாக கூறுகி​றார். வாய்ப்பு வந்​தால் ஏன் விட்​டுக் கொடுத்​தார்? யாராவது முதல்​வர் பதவியை விட்​டுக் கொடுப்​பார்​களா? பிக்​பாக்​கெட் அடிப்​பது போல் முதல்​வர் பதவியை அடித்து விடு​வார்​கள்.

2026-ம் ஆண்டு முதல்​வ​ராக பழனி​சாமி பொறுப்​பேற்க வேண்​டும் என்​பது இறைவனின் தீர்ப்​பு. ஜெயலலிதா இருக்​கும்​போது முதல்​வ​ராக வரவேண்​டும் என செங்​கோட்​டையன் ஆசைப்​பட்​டதை அதி​முக நிர்​வாகி​கள் ஆதா​ரத்​துடன் அவரிடம் தெரி​வித்​த​தால் செங்​கோட்​டைய​னின் அமைச்​சர் பதவி பறிக்​கப்​பட்​டது. சசிகலா, ஓபிஎஸ், டிடி​வி.​தினகரன் ஆகி​யோர் அதி​முக சட்​டத்​தின்​படி​யும், பொதுக்​குழு முடி​வின்​படி​யும் நீக்​கப்​பட்​ட​வர்​கள். அதனால் செங்​கோட்​டையன் உட்பட அவர்​கள் மூவரை​யும் அதி​முக​வில் மீண்​டும் சேர்க்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. பழனி​சாமி வசம் 75 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். சசிகலா, டிடிவி உள்​ளிட்​ட​வரிடம் ஒரு எம்​எல்​ஏ-​வாது உள்​ளார்​களா? நான் உட்பட பழனி​சாமி பக்​கம் இருப்​பவர்​கள் எல்​லாம் 1972-ம் ஆண்டு முதல் எம்​ஜிஆர் கட்சி தொடங்​கிய நாளில் இருந்து இந்த இயக்​கத்​தில்​தான் உள்​ளோம். நாங்​கள் சொல்​கி​றோம், அவர்​கள் 4 பேரை​யும் மீண்​டும் கட்​சி​யில் சேர்க்க வேண்​டாம்.

தி​முக​வின் பி-டீம் யார் என்​பதை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஆதா​ரப்​பூர்​வ​மாக தெரி​வித்​துள்​ளார். பசும்​பொன்​னில் பழனி​சாமி​யுடன் செங்​கோட்​டையன் வந்​திருக்க வேண்​டும், மற்​றவர்​களு​டன் அவர் சென்​றது குழப்​பத்தை ஏற்​படுத்​தத்​தான். அப்​போது என்னை நீக்​கி​னால் ரொம்ப சந்​தோஷப்​படு​வேன் என்​கி​றார். இன்று வழக்கு தொடர்​வேன் என்​கி​றார். சசிகலா, ஓ.பன்​னீர்​செல்​வம், டிடி​வி.​தினகரன் போல், அவர்​களிடம் போய் சேர்ந்த செங்​கோட்​டைய​னுக்​கும் அவர்​கள் நிலை​மை​தான் வரும் என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x