Published : 02 Nov 2025 12:09 AM
Last Updated : 02 Nov 2025 12:09 AM

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல்

கோப்புப் படம்

அரியலூர்: அரியலூர் மாவட்​டம் காடு​வெட்​டி​யில் பாமக (ராம​தாஸ்) மாவட்​டச் செயற்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

மாவட்​டத் தலை​வர் திரு​மாவளவன் தலைமை வகித்​தார். சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்ற வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி பேசி​ய​தாவது: பாமக தேர்​தலை எதிர்​கொள்ள தயா​ராகி​விட்​டது. தமிழகம் முழு​வதும் நிறு​வனர் ராம​தாஸ் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். கூட்​டணி இல்​லாமல் தேர்​தல் இல்​லை. வெற்றி பெறும் கட்​சி​யுடன் நிச்​ச​யம் கூட்​டணி வைப்​போம். ஆனால், யாருடன் கூட்​டணி என்​பதை ராம​தாஸ் முடிவு செய்​வார். பாமக​வில் பிளவு கிடை​யாது.

சிலர் அவசரப்​பட்டு போயிருக்​கலாம். அதைப்​பற்றி கவலை கொள்​ளத் தேவை​யில்​லை. பாமக செயற்​குழுக் கூட்​டத்​துக்கு பாது​காப்பு கோரி மனு அளித்​தோம். ஆனால், இங்​குள்ள டிஎஸ்பி அனு​மதி அளிக்​காததுடன், கட்​சி​யினரை ஒரு​மை​யில் பேசி​யுள்​ளார். ஜெயங்​கொண்​டம் டிஎஸ்பி ரவி சக்​கர​வர்த்​தியை கண்​டித்து
பாமக சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளோம்.

அண்ணா, கருணாநிதிபோல.. வாக்​காளர் பட்​டியலை திருத்​து​வ​தில் எங்​களுக்கு ஆட்​சேபணை இல்​லை. சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி நேர்​மை​யாக இருக்க வேண்​டும். பிஹார் மாநிலத்​தைப்​போல இருக்​கக் கூடாது. திமுக அரசு மீது மக்​களுக்கு மட்​டும்அல்ல, எங்​களுக்​கும் அதிருப்தி இருக்​கிறது. அண்​ணா, கருணாநிதி ஆட்​சிக் காலங்​களில் இருந்த செயல்​பாடு​கள்​போல ஸ்டா​லின் ஆட்​சி​யில் இல்​லை. அவரது அமைச்​சர​வை​யில் உள்ள அமைச்​சர்​கள் ஒவ்​வொரு​வரும் வெவ்​வேறு பிரச்​சினை​யில் சிக்கி இருக்​கின்​றனர். அவர்​களை முதல்​வர் ஸ்டா​லின் திருத்த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x