Published : 02 Nov 2025 12:09 AM
Last Updated : 02 Nov 2025 12:09 AM
கரூர்: தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக கரூரில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம்சாலையை அளவீடு செய்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ எஸ்.பி.பிரவீண்குமார், ஏஎஸ்பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 பேர்கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று காலை வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர்- கோவை சாலையில், ஈரோடு சாலை பிரியும் இடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் கயிறு கட்டியும், வாகனங்களை நிறுத்தியும் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். பின்னர், நெரிசல் ஏற்பட்ட இடம் மற்றும் அருகேயுள்ள இடங்களை நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் அளவீடு செய்தனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்: அப்போது, கரூர் டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் உடனிருந்தனர். அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் "தினமும் இப்படி போக்குவரத்தை தடை செய்தால், நாங்
கள் எப்படி வேலைக்குச் செல்வது?" என்று கூறி போலீ ஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT