Published : 01 Nov 2025 06:55 AM
Last Updated : 01 Nov 2025 06:55 AM

திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வடஇந்தியாவில் தோற்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

சென்னை: ‘​தி​முக அங்​கம் வகிப்​ப​தால்​தான் இண்​டியா கூட்​டணி வடஇந்​தி​யா​வில் தோற்​கிறது’ என தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கிண்டி ராஜ்பவன் அரு​கில் சர்​தார் வல்​ல​பாய் படேல் சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வேற்​றுமை​யில் ஒற்​றுமை என்​பது​தான் பாஜக​வின் கொள்​கை.

இந்த நாடு ஒற்​றுமை​யாக இருக்க வேண்​டும் என எல்​லோரும் பாடு​பட்டு கொண்​டிருக்​கும் நேரத்​தில் பிஹாரி, வட இந்​தி​யன் என பேசி இந்த தேசத்​தில் திமுக பிரி​வினையை ஏற்​படுத்​திக் கொண்​டிருக்​கிறது. பிஹார் மக்​களை திமுக கீழ்த்​தர​மாக பேசுகிறது. பாகு​பாடு காட்​டு​கிறது என்​று​தான் பிஹாரில் பிரதமர் மோடி பேசி​னாரே தவிர, தமிழர்​கள் பேசுகிறார்​கள் என அவர் கூற​வில்லை.

பிஹாரி​கள் அறி​வில்​லாதவர்​கள். அவர்​கள் தமிழகத்​துக்கு வந்​து, தமிழர்​களின் வேலையை பறித்​துக் கொள்​கிறார்​கள் என்று கே.என்​.நேரு கூறி​னார். பிஹாரி​கள் மேஜை துடைக்​க​வும், கழி​வறையை சுத்​தம் செய்​வதற்​கும்​தான் ஏற்​றவர்​கள் என திமுக​வினர் கூறினர். கோமி​யம் குடிக்​கும் மாநிலம் பிஹார் என நாடாளு​மன்​றத்​தில் திமுக​வினர் கூறி​னார்​கள்.

விமர்​சனங்​கள் திமுக மீது​தான் வைக்​கப்​படு​கிறதே தவிர; தமிழர்கள் மீது அல்ல. ஆனால், தமிழர்​களை பற்​றி பேசி​ய​தாக திரித்து பேசும் முதல்​வர் ஸ்டா​லினுக்கு எனது கண்​டனங்​கள். திமுக அங்​கம் வகிப்​ப​தால்​தான் இண்​டியா கூட்​டணி வட இந்​தி​யா​வில் தோற்​கடிக்​கப்​படு​கிறது. அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் பாஜக பங்​கேற்​பது குறித்து மாநில தலை​மை​தான் முடிவு​எடுக்​கும். ஆனால், அந்த கூட்​டம் வாக்​காளர் சிறப்பு திருத்த பணிக்கு எதி​ராக நடத்​தி​னால் நாங்​கள் அதை எதிர்ப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x