Published : 01 Nov 2025 05:44 AM
Last Updated : 01 Nov 2025 05:44 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக் காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகு திகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக் கிய செயல்முறைகள் தொடர் புடைய பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர் களைக் கொண்டு உடனடியாக தொடங்க வேண்டும்.
தற்போதுள்ள வாக்காளர் களுக்கு, தீவிர திருத்த கணக் கெடுப்பு படிவங்களை வழங்கி படிவத்தை பூர்த்தி செய்து, வாக்காளர் பதிவு அலுவலர் களுக்கு வழங்க வேண்டும். கணக்கெடுப்புப் பணியின் போது, புதிய வாக்காளர் பட் டியலில் பெயர் சேர்க்க விரும் புபவர்களுக்கு படிவம் 6 மற் றும் அதற்கான உறுதிமொழிப் படிவத்தை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளர் களின் வீட்டுக்கு, குறைந்தது 3 முறை சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந் தவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள், குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந் தவர்களை கணக்கெடுப்பு பணியின்போது கண்டறிந்து உரிய படிவம் வழங்க வேண்டும். இவ்வாறு பயிற்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT