Published : 01 Nov 2025 06:19 AM
Last Updated : 01 Nov 2025 06:19 AM
சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வி யையும் தமிழக மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு செயல்பட்டு
வருகிறது. அந்த வகையில், மேற்கு ஆஸ்திரேலிய முதன்மை பல் கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதற் கான முன்னெடுப்புகளை
தமிழக அரசு மேற்கொண்டுள் ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை, மேற்கு ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், சர்வதேச பல்கலைக் கழக கல்வி, குடியுரிமை மற்றும் பல்லின கலாச்சார நலன்கள் துறை அமைச்சர் டோனி புட்டி நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில், கல்வி ஒத்து ழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதன் முக்கிய அம்சமாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் மேம்பட்ட பாடத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள கல்லூரி களில் அறிமுகம் செய்வது, தமிழக மாணவர்கள் மேற்படிப்புக்காக மேற்கு ஆஸ் திரேலியா செல்வதற்கான வாய்ப்புகளை எளிதாக்குவது மற்றும் இருதரப்பு கல்வி பரி மாற்றத் திட்டங்களை செயல் படுத்துவது குறித்து விரிவான செயல் திட்டம் தயாரிக்கப் பட்டு அதை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது, தமிழக உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிளை ஜாக்கி, மேற்கு ஆஸ்திரேலிய வர்த்தக ஆணை யர் இயன் மார்டின்ஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனி ருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT