Published : 31 Oct 2025 06:05 AM
Last Updated : 31 Oct 2025 06:05 AM

தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதி​காரி​களுக்கு ஐஏஎஸ் அந்​தஸ்து வழங்கி மத்​திய அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் பூபீந்​தர் பாய் சிங் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழ்​நாடு குடிமை​யியல் பணி அதி​காரி​களான எஸ்​.க​வி​தா, சி.​முத்​துக்குமரன், பி.எஸ்​.லீலா அலெக்​ஸ், எம்​.வீரப்​பன், ஆர்​. ரேவதி ஆகியோரை இந்​திய ஆட்​சிப் பணி (ஐஏஎஸ்) அதி​காரி​களாக குடியரசுத் தலை​வர் நியமித்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பதவி உயர்வு பெற்​றுள்ள எஸ்​.க​விதா தற்​போது தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக் கழக பொது மேலா​ள​ராகவும், சி.​முத்​துக்​குமரன் பேரிடர் மேலாண்மை ஆணை​ய இணை இயக்​குந​ராக​வும், பி.எஸ்​.லீலா அலெக்ஸ் சென்னை சிப்காட் பொதுமேலா​ள​ராக​வும் எம்​.வீரப்​பன் ஒழுங்கு நடவடிக்கை ஆணை​ய​ராக​வும், ஆர்​.ரேவதி கங்​கை​கொண்​டான் சிப்​காட் மாவட்ட வரு​வாய் அதி​காரி​யாகவும் (நிலஎடுப்​பு) பணி​யாற்றி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x