Published : 31 Oct 2025 06:50 AM
Last Updated : 31 Oct 2025 06:50 AM

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் இணைந்து மரியாதை

மதுரை / ராமநாதபுரம்: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையன், கட்​சி​யில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை மீண்​டும் சேர்க்க வேண்​டும் என்று பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடு விதித்​தார். இதனால் அதிருப்​தி​யடைந்த பழனி​சாமி, செங்​கோட்​டையனின் கட்​சிப் பொறுப்​பு​களை பறித்​தார்.

இந்​நிலை​யில், தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​து​வதற்​காக மதுரை வந்த செங்​கோட்​டையன், தனி​யார் ஹோட்​டலில் தங்​கி​யிருந்த ஓ.பன்​னீர்​செல்​வத்தை திடீரென சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் இரு​வரும் ஒரே காரில் மதுரை​யில் இருந்து பசும்​பொன்​னுக்கு வந்​தனர்.

மானாமதுரை புதிய பேருந்து நிலை​யம் அருகே இரு​வரை​யும் ஓபிஎஸ் ஆதர​வாளர்​கள் வரவேற்​றனர். டிடி​வி.​தினகரன் வரு​வதற்​காக அவர்​கள் காத்​திருந்​தனர். ஆனால், கூட்​டம் அதி​க​மாக இருப்​ப​தாக போலீ​ஸார் கூறியதையடுத்​து, அவர்​கள் அங்​கிருந்து புறப்​பட்​டனர். பின்​னர் ராம​நாத​புரம் மாவட்​டம் அபி​ராமம் அருகே டிடி​வி.​தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம், செங்​கோட்​டையன் மூவரும் சந்தித்​து, சிறிது நேரம் ஆலோ​சனை செய்​தனர். பின்​னர் பசும்​பொன் சென்ற மூவரும் தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​தினர்.

சசிகலாவுடன் ஆலோசனை: துரோகத்தை வீழ்த்​த​வும், திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​ப​வும் அவர்​கள் சபதம் செய்​தனர். பின்னர் அங்கு வந்த சசிகலா​வை, ஓபிஎஸ், செங்​கோட்​டையன் சந்​தித்​துப் பேசினர். ஆனால், டிடி​வி.​தினகரன் சசிகலாவை சந்​திக்​காமல் புறப்​பட்டு சென்​றார்.

நீக்க தயக்​கம் இல்​லை... இந்நிலையில், செங்​கோட்​டையனின் செயல்​பாடு​கள் தொடர்​பாக மதுரை கப்​பலூரில் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களிடம் பழனி​சாமி ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கு​வதற்கு எந்த தயக்​க​மும் இல்​லை. அதற்கு சில நடை​முறை​கள் உள்​ளன, பொறுத்து இருங்​கள்” என்​றார். சசிகலா, டிடி​வி.​தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம், செங்​கோட்​டையன் சந்​திப்​பு, அதி​முக​வில் மட்​டுமின்​றி, அரசி​யல் களத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x