Published : 30 Oct 2025 06:40 AM
Last Updated : 30 Oct 2025 06:40 AM

வார இறுதி, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ​முகூர்த்​தம் மற்​றும் வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து சிறப்புப் பேருந்​துகள் இயக்​கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: அக்​.31-ம் தேதி (நாளை) முகூர்த்த நாள், நவ.1, 2 (சனி, ஞாயிறு) வார விடு​முறை நாட்​கள் என்​ப​தால், சென்னை உட்பட தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் அதிக மக்​கள் வெளியூர் செல்​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதை கருத்​தில் கொண்​டு. அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில் வழக்​க​மான பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்புப் பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூருக்கு நாளை 340 பேருந்​துகள், நவ.1-ம் தேதி 350 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு​வுக்கு நாளை 55 பேருந்​துகள், 1-ம் தேதி 55 பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. பெங்​களூரூ, திருப்​பூர், ஈரோடு, கோயம்​புத்​தூரில் இருந்​தும் பல்​வேறு பகு​தி​களுக்கு 100 சிறப்புப் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. மாதவரத்​தில் இருந்து நாளை மற்​றும் 1-ம் தேதி 20 சிறப்புப் பேருந்​துகள் இயக்​கப்​படும்.

ஞாயிறு (நவ.2) அன்று சொந்த ஊர்​களில் இருந்து சென்​னை, பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்​கேற்ப அனைத்து இடங்​களில் இருந்​தும் சிறப்புப் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. அரசுப் பேருந்​துகளில் பயணம் செய்ய நாளை 6,299 பேர், 1-ம் தேதி 3,562 பேர், 2-ம் தேதி 6,570 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x