Published : 30 Oct 2025 06:27 AM
Last Updated : 30 Oct 2025 06:27 AM

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கில் மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி விசாரிக்க உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்​சி​யைச் சேர்ந்த சுரேஷ் என்​பவரை மிரட்​டிய​தாக சவுக்கு சங்​கருக்கு எதி​ராக பதி​யப்​பட்ட வழக்​கில் மீண்​டும் புதி​தாக சம்​மன் அனுப்பி விசா​ரி்க்க உத்​தர​விட்​டுள்ள உயர்நீதி​மன்​றம், அவருக்கு எதி​ராக எந்த கடுமை​யான நடவடிக்​கை​யும் எடுக்​கக்​கூ​டாது என்​றும் அறிவறுத்​தி​யுள்​ளது. சென்னை மதுர​வாயல் பகு​தி​யைச் சேர்ந்த சவுக்கு சங்​கர் தூண்​டு​தலின்​பேரில் கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்​சி​யைச் சேர்ந்த சுரேஷ் என்​பவரை 3 பேர் மிரட்​டிய​தாக ஏழுகிணறு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சவுக்கு சங்​கர் தாக்​கல் செய்​திருந்த மனு, உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனுதா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் பி.வெற்​றிவேல் ஆஜராகி, “இது, சவுக்கு சங்​கரை பழி​வாங்​கும் நோக்​கில் பொய்​யான குற்​றச்​சாட்​டில் பதிவு செய்​யப்​பட்​டுள்ள போலி​யான வழக்​கு. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்​டும்” என வாதிட்​டார்.

பதி​லுக்கு காவல்​ துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன், “மனு​தா​ரருக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர். இந்த வழக்​கின் விசா​ரணைக்கு ஆஜராகும்​படி அனுப்​பப்​பட்ட சம்​மனைக்​கூட மனு​தா​ரர் வீடியோ​வாக யூடியூபில் பதிவேற்​றம் செய்​துள்​ளார். விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தில்​லை” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ர​ரான சவுக்கு சங்​கர் போலீ​ஸாரின் விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்​டும். அவருக்கு மீண்​டும் புதி​தாக சம்​மன் அனுப்பி விசா​ரிக்க வேண்​டும். அதே​நேரத்​தில், அவருக்கு எதி​ராக எந்​தவொரு கடுமை​யான நடவடிக்​கைகளும் எடுக்​கக்​கூ​டாது என உத்​தர​வி்ட்டு விசா​ரணையை 4 வார காலத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x