Published : 28 Oct 2025 05:46 AM
Last Updated : 28 Oct 2025 05:46 AM

உயிருக்கு ஆபத்து என்பதால் கரூர் செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம்: நயினார் நாகேந்திரன் கருத்து 

மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் பாண்டித்துரை உள்ளிட்டோர். | படம்: எல்.பாலச்சந்தர் |

சிவகங்கை: ‘கரூர் சென்​றால் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தால், விஜய் அங்கு செல்​வதை தவிர்த்​திருக்​கலாம்’ என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். விடு​தலைப் போராட்ட வீரர்​கள் மருது சகோ​தரர்​கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலில் அவர்​களது நினை​விடத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலை​மை​யில் மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா, மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம், மாவட்​டத் தலை​வர் பாண்​டித்​துரை,

முன்​னாள் மாவட்​டத் தலை​வர் மேப்​பல் சக்​தி, ஓபிசி அணி மாநிலச் செய​லா​ளர் நாகேஸ்​வரன் ஆகியோர் மரி​யாதை செலுத்​தினர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: கரூரில் மக்​களுக்கே பாது​காப்பு இல்​லை. அங்கு சென்​றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தாக அனை​வருக்​கும் சந்​தேகம் உள்​ளது. அதனால் கரூர் செல்​லாமல், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சென்​னைக்கு வரவழைத்து ஆறு​தல் கூறி​யிருக்​கலாம்.

மக்கள் விரோத அரசு: திமுக அரசு மக்​களுக்கு விரோத​மாக இருப்​ப​தால், யாருக்கு வாக்​களிக்க வேண்​டும் என்று மக்​கள் முடிவு செய்​து​விட்​டனர். தேசிய ஜனநாயகக் கூட்​டணி தேர்​தலில் வெற்றி பெற்று ஆட்​சி​யமைக்​கும். திமுக ஆட்​சி​யில் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர், கள்​ளக்​குறிச்​சி​யில் கள்​ளச்​சா​ரா​யத்​தால் 65 பேர் என தொடர்ந்து உயி​ரிழப்​புகள் ஏற்​படு​கின்​றன.

எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை​கள் நடக்​கின்​றன. பெண்​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. காவல் நிலை​யங்​களில் பெட்​ரோல் குண்டு வீசுகின்​றனர். தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்கு எங்கே இருக்​கிறது? இவ்​வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x