Published : 28 Oct 2025 12:57 AM
Last Updated : 28 Oct 2025 12:57 AM

கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் உயர திராவிட இயக்கமே காரணம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்   

சென்னையில் நேற்று நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழாவில், பிம் ஆய்வுக்கட்டுரை தொகுப்பு நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை ‘பிம்’ தலைவர் ரவி அப்பாசாமி பெற்றுக்கொண்டார். அருகில், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், பிம் நிர்வாகக் குழு உறுப்பினர் என்.பாலபாஸ்கர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய கிருஷ்ணா, முதுகலை துறையின் தலைவர் ராகவேந்திரா ஆகியோர் உள்ளனர்.

சென்னை: ஒரு​காலத்​தில் கல்வி மறுக்கப்​பட்ட சமூகங்​கள் உயரக் காரணம் திரா​விட இயக்​கம் என்று முதல்வர் ஸ்டா​லின் தெரிவித்​தார்.

திருச்சி பார​தி​தாசன் மேலாண்​மைக் கல்வி நிறு​வனத்​தின் (பிம்) 33-வது பட்​டளிப்பு விழா சென் னையில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் ஸ்டா​லின் மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை வழங்​கி பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே உயர்​கல்​வி​யில் சிறந்த மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. உயர்​கல்வி சேர்க்கை விகிதம், என்​ஐஆர்​எஃப் தரவரிசை என பல குறி​யீடு​கள் அதற்கு சான்​றாக உள்​ளன.

ஒரு​காலத்​தில் கல்வி மறுக்​கப்​பட்ட சமூகங்​கள் இன்று படித்து முன்​னேறி, உலகம் முழு​வதும் மிக உயர்ந்த இடத்​தில் இருக்க காரணம் திரா​விட இயக்கம். இந்த அடித்​தளத்​தில், உயர்​ கல்​வி​யில் தலைசிறந்த தமிழகத்தை கட்​டமைத்​தவர் கருணாநி​தி. அதன் தொடர்ச்​சி​யாகவே, முதல்​வரின் காலை உணவு, தமிழ்ப் புதல்​வன், புது​மைப்​பெண், நான் முதல்​வன், அறிவியல் ஆய்​வு​களை ஊக்​குவிக்க முதல்​வரின் ஆய்​வுத் திட்ட நிதி உதவி, மாதிரிப்பள்​ளி​கள், தகை​சால் பள்​ளிகள் என்று பல முன்​னோடி திட்​டங்​களை திரா​விட மாடல் அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலத்​தில், உங்​களது நேர்​மை​தான் உங்​கள் அறிவை அளவிட உதவும். வெற்​றிக்​கும், ஒழுக்​கத்​துக்​கும் இடையே சம நிலை மிக​வும் அவசி​யம். எத்​தனை மாற்​றங்​கள், வளர்ச்​சிகள் வந்​தா​லும், சில அடிப்​படைகள் எப்​போதும் மாறாது. அதில் மாணவர்கள் உறு​தி​யாக இருக்க வேண்​டும். எந்தச் சூழலிலும் நேர்​மை, நம்​பிக்​கை, பொறுப்பு ஆகிய வற்றை கைவி​டாதீர்​கள். எங்கு சென்றாலும், துணிச்​சலாக தெளி​வாக அன்​போடும் அறத்​தோடும் செயல்​படுங்​கள்.

உயர உயரச் செல்​லும்போது, கீழே இருப்​பவர்​களையும் கை தூக்கி விட​வேண்​டும். இது​தான் உண்​மை​யான தலை​மைத்​துவ பண்​பு. இன்​றைய நவீன உலகத்​தில் பல்​வேறு பன்​னாட்​டுப் பெரு நிறு​வனங்​களின் தலைமை அதி​காரி​களாக நீங்​கள் வர வேண்​டும். பல புதிய நிறு​வனங்​களை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். விழா​வில் மொத்​தம் 197 பேர் பட்​டம் பெற்​றனர். இந்த நிகழ்​வில், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர், ‘பிம்’ தலை​வர் ரவி அப்​பா​சாமி, நிர்​வாகக் குழு உறுப்​பினர் என்​.​பால​பாஸ்​கர், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஜெயகிருஷ்ணா, முதுகலை துறை தலை​வர் ராகவேந்​தி​ரா, பேராசிரியர்​கள்​,மாணவ, மாணவி​கள்​, பெற்​றோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x