Published : 27 Oct 2025 08:11 PM
Last Updated : 27 Oct 2025 08:11 PM
சிவகங்கை: “திமுகவினர் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்காமல், சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கின்றனர்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் சீமான் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக வெற்றி பெறும் என்று எப்படி கூற முடியும் ? அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தப் பிரிவும், குழப்பமும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறதே, அது கட்சியாக உங்களுக்கு தெரியவில்லையா? திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு, நாடாக இருக்காது; சுடுகாடாகத் தான் இருக்கும்.
20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படாமல் சாலையில் கிடப்பதாக விவசாயிகள் அழுது கொண்டிருக் கின்றனர். 75 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் திமுகவினர் வீடு, வீடாக சென்று தீபாவளி பரிசு கொடுத்து சத்தியம் வாங்கி வாக்கு கேட்கின்றனர். சாதனையைச் சொல்லி வாக்கு கேட்காமல், சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கின்றனர்.
நெல்லுக்கு அரசு உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வதில்லை. ஆனால், நினைவுச் சின்னங்களை அமைக்க கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக் கின்றனர். மதுபானத்தை பாதுகாக்க ஏசி அறை அமைக்கின்றனர். ஆடம்பரத்துக்கு மக்கள் பணத்தை வீணடிக்கும் அரசு, உணப் பொருட்கள் சேமிக்க கிடங்கு, பள்ளி அமைக்கவில்லை.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் முறையாக நடக்குமா என்பது சந்தேகமே? அதில் ‘சதி’ இருப்பது உண்மைதான். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த சொன்னால், மத்திய அரசு நடத்தணும் என்கின்றனர். ஆனால் மாநில உரிமை பற்றி பேசுவர். திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது” என்று சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT