Published : 27 Oct 2025 05:48 AM
Last Updated : 27 Oct 2025 05:48 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு அனுமதி: அதிமுக அரசு அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை - இபிஎஸ்

சென்னை: அ​தி​முக அரசு அமைந்​ததும், பள்​ளிக்​ கரணை சதுப்பு நிலத்​தில் கட்​டு​மானத்தை அனு​ம​திக்​கும் விவ​காரத்​தில், தவறிழைத்​தவர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூறியுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் பரு​வ​மழைக் காலங்​களில் சென்​னை​யில் ஏற்​படும் வெள்​ளப்​பெருக்கை தடுக்​கும் வடிநில​மாக​வும், பல்​லு​யிர் பெருக்​கத்​துக்கு இதய​மாக​வும் விளங்​கு​கிறது.

அதி​முக அரசு மத்​திய அரசின் நிதி​யுத​வி​யுடன் ரூ.165.68 கோடி​யில் 695 ஹெக்​டேர் சதுப்பு நிலத்​தில் ‘பள்​ளிக்​கரணை சுற்​றுச்​சூழல் மீட்பு திட்​டம்’ ஒன்றை 2018-19-ல் செயல்​படுத்த ஒப்​புதல் வழங்​கியது. “பள்​ளிக்​கரணை சதுப்​புநிலம் ‘ராம்​சார் ஒப்​பந்​தம்’ அடிப்​படை​யில் பாது​காக்​கப்பட வேண்​டிய பகு​தி​யாகும்.

இதன்​படி ‘ராம்​சார் அறிவிக்கை செய்​யப்​பட்ட சதுப்பு நிலத்​திலோ அல்​லது அதன் எல்​லை​யி​லிருந்து ஒரு கி.மீட்​டருக்​குள் எந்​த​வித​மான கட்​டு​மானங்​களை​யும் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கக்​கூ​டாது” என்று தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் வழங்​கிய தீர்ப்பை சிஎம்​டிஏ அதன் அலு​வலர்​களுக்கு அனுப்​பி​யுள்​ளது.

சுற்​றுச்​சூழலைப் பாது​காக்க சதுப்பு நிலங்​கள் உயிர்​நாடி​யாகத் திகழ்​கின்றன என்ற காரணத்​தால், அவற்றை வேறுபயன்​பாட்​டுக்கு உபயோகப்​படுத்​தக்​கூ​டாது என்​பது ஆண்​டாண்டு கால​மாக கடைபிடிக்​கப்​பட்டு வரும் நிய​தி​யாகும். இதை திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்​கர் நிலத்தை ‘பிரி​கேட்’ என்ற கட்​டு​மான நிறு​வனத்​துக்கு ரூ.2 ஆயிரம் கோடி​யில் சுமார் 1250 குடி​யிருப்​பு​களைக் கட்ட அனு​மதி வழங்​கி​யுள்​ள​தாகச் செய்​தி​கள் வரு​கின்​றன.

சென்​னை​யின் சுற்​றுச்​சூழலில் பெரு​மளவு பாதிப்பை ஏற்​படுத்​தக்​கூடிய இந்த திட்​டத்​துக்கு பல்வேறு அரசுத் துறை​கள் அனு​மதி அளித்​துள்​ளதன் மர்​மம் என்ன என்​பதை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்​டும்.

இந்த சதுப்பு நிலத்​தில் எந்​தவொரு கட்​டு​மான திட்டத்​தை​யும் செயல்​படுத்த இந்த அரசு அனு​ம​திப்​பதை அதி​முக கை கட்டி வேடிக்கை பார்க்​காது. அதி​முக அரசு அமைந்​தவுடன் தவறிழைத்​தவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x