Published : 27 Oct 2025 06:33 AM
Last Updated : 27 Oct 2025 06:33 AM

மேட்​டூர் அணையி​லிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 45,500 கனஅடி​யாக​வும், நேற்று மதி​யம் 30,500 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து மாலை 25,500 கன அடி​யாக குறைந்​தது. எனவே, அணையி​லிருந்து காவிரி​யில் திறக்​கப்​படும் நீரின் அளவும் 45,000 கனஅடி​யில் இருந்து நேற்று மதி​யம் 30,000 கனஅடி​யாக​வும், மாலை 25,000 கன அடி​யாக​வும் குறைக்​கப்​பட்​டது.

அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 2,500 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி நீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது. ஒகேனக்​கல் அருவி​களில் குளிப்​ப​தற்​கும், ஆற்​றில் பரிசல் இயக்​க​வும் விதிக்​கப்​பட்ட தடை தொடர்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x