Published : 27 Oct 2025 07:10 AM
Last Updated : 27 Oct 2025 07:10 AM

கஞ்சா வழக்கில் இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கஞ்சா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட இளைஞருக்கு போலீ​ஸார் ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்​கன்​வாடி அருகே போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்​பற்​றிய​தாகக் கூறி 7 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விக்​னேஷ் என்​பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து மதுரை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் விக்​னேஷ் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனு நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. இரு தரப்பு வாதங்​களைக் கேட்ட நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்ப​தாவது: விக்​னேஷ் கஞ்சா வைத்​திருந்​ததற்​கான எந்த ஆதா​ரத்​தை​யும் போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​க​வில்​லை. எனவே, இந்த வழக்கு போலீ​ஸா​ரால் ஜோடிக்​கப்​பட்​டது என்​பது தெரிய வரு​கிறது.

மேலும், நீதி​மன்​றத்​தில் தவறான சாட்​சி​யங்​களை முன்​வைத்​து, விக்​னேஷுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வ​தில் போலீ​ஸார் ஈடு​பட்​டுள்​ளனர். விக்​னேஷ் கைதான​தில் இருந்து ஜாமீன் வழங்​கப்​ப​டா​மல் சிறை​யிலேயே வைக்​கப்​பட்​டுள்​ளார். எனவே, அப்​போதைய திடீர் நகர் ஆய்​வாளர் (பொறுப்​பு) லிங்​கப்​பாண்டி மற்​றும் உதவி ஆய்​வாளர், காவலர் ஆகியோர் சேர்ந்து ரூ.10 லட்​சம் இழப்​பீட்டை ஒரு மாதத்​தில் விக்​னேஷுக்கு வழங்க வேண்​டும்.

மேலும், இந்த விவ​காரம் தொடர்​பாக 3 போலீ​ஸாரிட​மும் டிஜிபி விசா​ரணை நடத்​தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். விக்​னேஷுக்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்​டனை​யும், ரூ.1 லட்​சம் அபராத​மும் ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x