Published : 27 Oct 2025 06:56 AM
Last Updated : 27 Oct 2025 06:56 AM
விஜய்க்கு உள்ள ‘மாஸ்’ வாக்காக மாற வேண்டும் என்றால் பயிற்சியாளர்கள் தேவை. அந்தப் பயிற்சியாளர்கள்தான் அதிமுகவினர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை சரி செய்யாமல் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தால், இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவர். அதிமுக, பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்புஅதிகரித்துள்ளது. அந்த வெறுப்பு அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உள்ள சதிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பின் தெரியவரும். உயிரிழந்த குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான், விஜய் அவர்களை நேரில் வரவழைத்துள்ளார்.
விஜய்க்கு உள்ள ‘மாஸ்’ வாக்காக மாற வேண்டும் என்றால் பயிற்சியாளர்கள் தேவை. அந்தப் பயிற்சியாளர்கள்தான் அதிமுகவினர். விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவது அவரது எதிர்காலத்துக்கும், அவரது பாதுகாப்புக்கும் நல்லது. பாஜக - அதிமுக - விஜய் கூட்டணி சேர வேண்டும் என மக்களும் விரும்புகிறார்கள். விஜய்யை கூட்டணிக்கு அழைக்கவில்லை, வந்தால் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT