Published : 27 Oct 2025 06:25 AM
Last Updated : 27 Oct 2025 06:25 AM

10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு

சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார். உடன், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர். | படம்: எஸ்.குரு பிரசாத் |

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு கோரி வரும் டிசம்​பர் மாதம் போராட்​டம் நடை​பெறும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பாமக பொதுக்​குழுக் கூட்​டம் சேலத்​தில் நேற்று நடை​பெற்றது. மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் அருள் எம்​எல்ஏ தலைமை வகித்​தார்.

மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் கதிர்​.​ராசரத்​தினம் வரவேற்​றார். கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி எம்​எல்ஏ, புதிய செயல் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்ட ஸ்ரீகாந்தி பரசு​ராமன், வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பூ.த.அருள்​மொழி, இளைஞர் சங்க மாநிலத் தலை​வர் ஜிகேஎம்​. தமிழ்க்​குமரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

ஸ்ரீகாந்திக்கு அதிக ஆதரவு: கூட்​டத்​தில் பாமக நிறு​வனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: பாமக​வுக்கு சேவை செய்​யவே எனது மகளை செயல் தலை​வ​ராக நியமித்​துள்​ளேன். ஸ்ரீகாந்திக்கு கட்​சி​யில் அதிக ஆதரவு உள்​ளது. நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் 30 முதல் 35 வயதுள்ள இளைஞர்​கள் அதி​கம். பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள தமிழ்க்​குமரனுக்கு இளைஞர்​கள் துணைநிற்க வேண்​டும்.

வன்​னியர் சமூகத்​தினருக்கு 10.5 சதவீதம் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி பாமக சார்​பில் வரும் டிசம்​பர் மாதம் போராட்​டம் நடத்​தப்​பட​வுள்​ளது. மேட்​டூர் அணை​யின் உபரி நீரைப் பயன்​படுத்த வேண்​டுமென எனது தலை​மை​யில் நடந்த போராட்​டம் காரண​மாக, 100 ஏரி​கள் பயன்​பெறும் வகையி​லான உபரிநீர் திட்​டத்தை அதி​முக அரசு நிறைவேற்​றியது.

இதே​போல, மீத​முள்ள அனைத்து ஏரி​களும் பயனடை​யும் வகை​யில் நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேட்​டூர் அணை​யின் உபரிநீர் ஒரு சொட்​டுக்​கூட வீணா​காத நிலை ஏற்பட வேண்​டும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​ட​ணியை நிச்​ச​யம் உருவாக்குவேன். கூட்​டணி குறித்த அறி​விப்பு இந்த ஆண்டு இறு​தி​யிலோ அல்​லது அடுத்த ஆண்டு தொடக்​கத்​திலோ முறை​யாக அறிவிக்​கப்​படும். திமுக​வுடன் கூட்​ட​ணியா என்​பது போகப்​போகத்​தான் தெரி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x