Published : 27 Oct 2025 12:51 AM
Last Updated : 27 Oct 2025 12:51 AM
சென்னை: சமீப காலமாக இணையவழிமோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பணம் பறிக்கப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்கள் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் அல்லது https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார். மேலும், பங்குச் சந்தை முதலீட்டு மோசடிகளில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை சைபர் க்ரைம் போலீஸார் விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் திரைப்பட குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார்.
அதில், குறைந்த முதலீட்டில் இரட்டிப்பு லாபம் பெறலாம்’ எனக்கூறி பொதுமக்களை மோசடி நபர்கள் நம்ப வைக்கின்றனர்.அதை நம்பி ஏராளமானோர் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்று முதலீடு செய்துபணத்தை பறிகொடுக்கின்றனர். பின்னர், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு கூட சிலர் செல்கின்றனர். எனவே, யாரும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்.என்ற எச்சரிக்கையை இந்த குறும்படம் மூலம் போலீஸார் வெளிப்படுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT