Published : 25 Oct 2025 06:52 AM
Last Updated : 25 Oct 2025 06:52 AM

திமுக, விசிகவை பிரிக்க முடி​யாது: திருமாவளவன்

தஞ்​சாவூர்: தஞ்​சாவூரில் நேற்று கட்சி நிர்​வாகி இல்ல நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​த் தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: திமுக​வுக்​கும், விடு​தலை சிறுத்​தைகள் கட்​சிக்​கும் இணக்​க​மான உறவு உள்​ளது.

திரு​மாவளவனுக்கு எதி​ராக விமர்​சனம் செய்​தால், விசிக​வினர் ஆத்​திரப்​படு​வார்​கள். அதன் மூலம் இரு கட்​சிகளுக்கு இடையி​லான உறவை சிதைத்​து​விடலாம் என பலர் கருதுகின்​றனர். அது ஒரு​போதும் நடக்​காது.

ஏனென்​றால், நாங்​கள் பெரி​யார், அம்​பேத்​கர், காரல்​மார்க்ஸ் கொள்​கைகளைப் பின்​பற்றி வரு​கிறோம். அதே கொள்​கைகளை திமுக​வும் பின்​பற்றி வரு​வ​தால், எங்​களுக்​குள் எந்​தப் பிரி​வினை​யும் ஏற்​ப​டாது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x