Published : 25 Oct 2025 05:56 AM
Last Updated : 25 Oct 2025 05:56 AM

அடையாற்றில் ஒரே நேரத்தில் 40,000 கனஅடி நீர் வந்தால்கூட பாதிப்பு வராது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: வடகிழக்கு பருவமழையை யொட்டி, பெசன்ட் நகர் ஊர்குப்பம் முகத்துவாரப் பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ஆழம், அகலப்படுத்தப்பட்டுள்ளது: சென்னை அடையாறு செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். அந்த ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 21.27 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறித்து அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டு படிப்படியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகள் அகலப்படுத்தி, ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அடையாற்றில் ஒரே நேரத்தில் 40,000 கனஅடி அளவுக்கு உபரிநீர் வந்தால்கூட குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x