Published : 24 Oct 2025 06:56 AM
Last Updated : 24 Oct 2025 06:56 AM

தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான், புதிய டிஜிபி நியமன பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பிவைக்க இயலவில்லை. வழக்கு முடிந்​தவுடன் கால​தாமதம் இன்றி அந்​தப் பட்​டியல் அனுப்பி வைக்கப்​பட்​டது என்று ஏற்​கெனவே கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்​லை. அதன்​பிறகு டிஜிபி நியமனப் பட்​டியல் தொடர்​பாக யுபிஎஸ்சி நடத்​திய கூட்​டத்​தில், விதி​களுக்குப் புறம்​பாக சில பெயர்​கள் முன்மொழியப்​பட்​டது குறித்​து, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்​பைப்பதிவு செய்​தது.

மாநில உரிமைகளை மதிக்​கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடி​யாது. தமிழக அரசு தனக்கு வேண்டப்​பட்ட நபரை புதிய டிஜிபி-​யாக அமர்த்த வேண்​டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்​சினை. சட்​டம் - ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்​துகளைப் புறக்​கணித்து தனக்கு வேண்​டப்பட்ட நபரை தமிழகத்​தில் டிஜிபி​யாக அமர்த்த மத்​திய அரசு முயலு​வ​தே, புதிய டிஜிபி நியமனத்​தில் தமிழக அரசு சந்​திக்​கும் பிரச்​சினை.

டிஜிபி நியமனத்​தி​லும் மாநில உரிமை​களை நிலை​நாட்ட முழுமுயற்​சிகளை​யும் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான அரசு எடுத்து வரு​கிறது. ஜெயலலிதா ஆட்​சிக் காலத்தில் எந்த சட்​டப் பிரச்​சினை​யும் இல்​லாத​போதே, எத்​தனை ஆண்​டு​கள் டிஜிபி இல்​லாமல் அரசை நடத்​தி​னார் என்​பதை பழனி​சாமி எண்​ணிப் பார்க்க வேண்​டும். அதை விடுத்து மாநில உரிமை​களுக்​காகப் போ​ராடும் முதல்​வர் ஸ்டா​லினைக்​ குறை கூறு​வ​தா?
இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x