Published : 23 Oct 2025 05:44 AM
Last Updated : 23 Oct 2025 05:44 AM

சென்னையில் தயார் நிலையில் நிவாரண மையங்கள்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

சென்னை: சென்​னை​யில் நிவாரண மையங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரிவித்துள்ளார். சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களில் வடகிழக்கு பரு​வ​மழையை ஒட்​டி, திரு​வல்​லிக்​கேணி வெங்​கட்​ரங்​கம் தெரு​வில் செயல்​பட்டு வரும் சமு​தாய நலக் கூடத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்​காலிக நிவாரண மையம் ஆகிய​வற்​றில் பொது​மக்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​கள் குறித்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று அதி​காலை திடீர் ஆய்வு மேற்​கொண்​டார்.

அதனைத் தொடர்ந்​து, ரிப்​பன் மாளி​கை​யில் உள்ள ஒருங்​கிணைந்த கட்​டுப்​பாடு மையத்​தில் ஆய்வு செய்​த​போது, நுங்​கம்​பாக்​கம் ஜெய்​சங்​கர் பாதை​யில் மழைநீர் தேங்​கு​வ​தாக தொலைபேசி வழி​யாக புகார் வந்​த​போது, அவரே பேசி குறை​களைக் கேட்​டறிந்​தார். பின்​னர் நேரில் வென்று மாநக​ராட்​சி​யின் நடவடிக்​கையை பார்​வை​யிட்​டார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய துணை முதல்​வர் உதயநி​தி, “சமூக வலைதள புகார்​கள், தொலைபேசி வழி​யாக வரும் புகார்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். கட்​டுப்​பாட்டு அறைக்​கும் சென்று பார்​வை​யிட்​டேன். நானும் மாநக​ராட்சி ஆணை​யரும் நேரில் சென்று ஆய்வு செய்து வரு​கிறோம். டெல்டா மாவட்​டங்​களில் மழை​யால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களுக்கு அமைச்​சர்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

மாவட்ட ஆட்​சி​யருடன் ஆலோனை நடத்​தப்​பட்​டுள்​ளது. அனை​வரும் தயார் நிலை​யில் உள்​ளனர். நிவாரண மையங்​களும் தயா​ராக உள்​ளன. உணவு தேவைப்​படும் இடங்​களுக்கு காலை​யில் உணவும் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த ஆய்​வு​களின்​போது, சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணை​யர் க​வுஷிக் உள்
​ளிட்​டோர்​ உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x