Published : 23 Oct 2025 06:19 AM
Last Updated : 23 Oct 2025 06:19 AM

ஏழை மாணவர் நலனுக்கான பிஎம் ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு ஏற்க வேண்டுமென பாஜக வலியுறுத்தல்

சென்னை: தமிழக திமுக அரசு தனது வறட்​டுப் பிடி​வாதத்தை கை விட்​டு அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி முன்​னேற்​றத்​தில் கவனம் செலுத்த பிரதமரின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்குமாறு தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​ட அறிக்​கை: ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்க கேரள கம்​யூனிஸ்ட் அரசு முன்​வந்​திருப்​பது வரவேற்​கத்​தக்கது.

மத்​திய அரசின் இந்த திட்​டம் அரசுப் பள்​ளி​களின் கட்​டமைப்பை மேம்​படுத்​து​வதோடு, தனி​யார் பள்ளி மாணவர்​களுக்கு கிடைக்​கும் அனைத்து வசதி, வாய்ப்​பு​களும், அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் ஏழை மாணவர்​களுக்​கும் கிடைக்​கச் செய்​யும் என்ற உண்​மையை உணர்ந்து இந்த திட்​டத்​தில் இணைய கேரள அரசு முடி​வெடுத்​துள்​ளது.

பல ஆண்​டு​களாக கடை பிடித்த வறட்​டுப் பிடி​வாதத்தை கைவிட்​டு மத்​திய அரசுடன் ஒத்​துழைக்க சம்​ம​தித்​துள்​ளது.அதே வறட்​டுப் பிடி​வாதத்​தை தமிழக திரா​விட மாடல் திமுக அரசும் கைவிட்​டு, மத்​திய அரசோடு இணைந்​து ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி முன்​னேற்​றத்​தில் கவனம் செலுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால், திமுக அரசு தமிழர் விரோத, மாணவர் விரோத அரசு என்ற முத்​திரை வலுப்​பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x