Published : 22 Oct 2025 06:10 AM
Last Updated : 22 Oct 2025 06:10 AM

சென்னை விமான நிலையத்தில் பட்டாசு புகை சூழ்ந்து 15 விமானங்களில் சேவை பாதிப்பு

சென்னை:சென்னை விமான நிலை​யத்​தில் பட்​டாசு புகை சூழ்ந்த​தால் 15 விமானங்​களில் சேவை சிறிதளவு பாதிக்​கப்​பட்​டது. தீபாவளி அன்று சென்னை மீனம்​பாக்​கம் விமான நிலை​யத்​தைச் சுற்றி உள்ள பகு​தி​களில் அதிக அளவி​லான பட்​டாசுகள் தொடர்ச்​சி​யாக வெடிக்​கப்​பட்​டன. இதனால் எழுந்த புகை​யால் காற்​றில் மாசு ஏற்​பட்​டது.

இதனால், சென்னை விமான நிலை​யத்​தில் ஓடு​பாதை பகு​தி​யில் புகை மண்​டலம் சூழ்ந்​தது. இதையடுத்து விமான வரு​கை, புறப்​பாட்​டுக்கு சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை​யில் கூடு​தல் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்த அதி​காரி​கள், தரை​யிறங்க வந்த விமானங்​களுக்கு உடனடி​யாக அனு​மதி கொடுக்​காமல், ஓடு பாதைகளைக் கண்​காணித்​து, ஓடு​பாதை தெளி​வாகத் தெரிந்​தால் மட்​டுமே விமானங்​கள் தரை​யிறங்க அனு​ம​தித்​தனர்.

அது வரை​யில் விமானங்​களை தொடர்ந்து வானில் வட்​டமடித்து பறக்​கச் செய்​தனர். அதே​போல், சென்​னையி ல் இருந்து புறப்பட வேண்​டிய விமானங்​களுக்​கும் உடனடி​யாக புறப்பட சிக்​னல் கொடுக்​காமல், ஓடு​பாதையை கண்​காணித்​து, ஓடு​பாதை தெளி​வாகத் தெரிந்​தால் மட்​டுமே விமானங்​கள் ஓடு​பாதை​யில் ஓடு​வதற்கு அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

இதனால், சென்​னை​யில் தரை​யிறங்க வந்த, ஹைத​ரா​பாத், குவஹாட்டி ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் மற்​றும் லக்​னோ, மதுரை, டெல்​லி, பெங்​களூர், டாக்கா பகு​தி​களி​லிருந்து வந்த இண்​டிகோ ஏர்​லைன்​ஸின் 7 விமானங்​கள் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்து பறந்த பின்​னர் தரை​யிறங்​கின.

சென்​னையி​லிருந்து புறப்பட வேண்​டிய டெல்​லி, கொச்​சி, பெங்​களூரு, கோவை, ஹைத​ரா​பாத், தோகா, கோலாலம்​பூர் ஆகிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​கள், ஹைத​ரா​பாத் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் தாமத​மாக புறப்​பட்​டுச்சென்​றன. பட்​டாசு புகை மண்​டலத்​தால் மொத்​த​மாக சென்னை விமான நிலை​யத்​தில் 7 வருகை விமானங்​கள், 8 புறப்​பாடு விமானங்​களின் சேவை சிறிதளவு பாதிக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x