Published : 22 Oct 2025 06:12 AM
Last Updated : 22 Oct 2025 06:12 AM

சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ​விரும்​பும் நபர்​களை கொண்டு சுமை​களை ஏற்​றி, இறக்​கும் வர்த்தக நிறு​வனங்​களுக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை நகரியைச் சேர்ந்த ஏஆர்​ஏஎஸ் நிறு​வனம், தங்​கள் பணி​யாளர்​களை கொண்டு பொருட்​களை ஏற்​றி, இறக்​கும் நடவடிக்​கைக்கு இடையூறு ஏற்படுத்​தும் சுமை தூக்​கும் தொழிலா​ளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு போலீ​ஸாருக்கு உத்​தர​விட​வும், பாது​காப்பு வழங்​க​வும் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தது.

இதே​போல, திருச்​சி​யைச் சேர்ந்த பழைய பேப்​பர் தொழில் நடத்தி வரும் ஷேக்​அர்​ஷாத், பாக்​கிய​ராஜ் உள்​ளிட்​டோர் தொழிலா​ளர் சங்​கத்​தினருக்கு எதி​ராக​வும், திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலா​ளர் சங்​கம் சார்​பில், சுமை தூக்​கும் தொழிலா​ளர் விவகாரத்தில் வியா​பாரி​கள் சங்​கங்​கள் தலை​யிட தடை விதிக்​கக் கோரி​யும் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிபதி பி.பு​கழேந்தி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: வர்த்​தகம் அல்​லது வணி​கம் மேற்​கொள்​வோர், தாங்​கள் விரும்​பும் நபரை பணி​யில் அமர்த்த சுதந்​திரம் உள்​ளது. அதே​நேரத்​தில், இந்த உரிமை​யால் தனி நபர்​களால் பாதிக்​கப்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டியது அரசின் கடமை.

தமிழகத்​தில் சுமை தொழிலா​ளர்​களின் வேலை​வாய்ப்பு மற்​றும் சேவை​களை ஒழுங்​குப் ​படுத்த சட்​டம் இல்​லை. இதனால் தொழிற்​சங்​கம் என்ற போர்​வை​யில் கட்​டுப்​படுத்​தப்​ப​டாத சுரண்​டல் நடக்​கிறது. எனவே, சுமை தூக்​கும் தொழிலா​ளர்​கள் சட்​டத்​துக்​கான வெற்​றிடத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திருச்​சி, மதுரை​யில் மனு​தா​ரர்​கள் தாங்​கள் விரும்​பும் தொழிலா​ளர்​களை கொண்டு சரக்​கு​களைக் கையாள போலீ​ஸார் உரிய பாது​காப்பு வழங்க வேண்​டும். திருச்​சி​யில் சுமைப் பணி தொழிலா​ளர் பிரச்​சினை​யால் உரு​வான வழக்​கு​களை போலீ​ஸார் முடிவுக்கு கொண்​டுவர வேண்​டும். தொழிற்​சங்க உறுப்​பினர்​கள் உள்​ளிட்​டோர் மிரட்​டு​வது, பணம் பறிப்​ப​தைக் கண்​டறிந்​தால் வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x