Published : 22 Oct 2025 06:03 AM
Last Updated : 22 Oct 2025 06:03 AM

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்​டூர் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக காவிரி ஆற்​றில் வெளி​யேற்​றப்​படும் உபரி நீர்.

தரு​மபுரி / மேட்​டூர்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் ஒகேனக்​கல்​லில் அருவி​களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்​ளது. நடப்​பாண்டு 7-வது முறை​யாக மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், அணை​யில் இருந்து 35,000 கனஅடி வீதம் தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. தமிழகம், கேரளா, கர்​நாடக உள்​ளிட்ட மாநிலங்​களில் வட கிழக்​குப் பரு​வ​மழை நடப்​பாண்​டில் முன்​கூட்​டியே தொடங்​கி​யுள்ள நிலை​யில், அவ்​வப்​போது கனமழை பெய்து வரு​கிறது.

கர்​நாட​கா​வில் உள்ள அணை​கள் நிரம்​பிய நிலை​யில், உபரிநீர் காவிரி​யில் திறந்து விடப்​பட்​டுள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடி​யாக​வும், மாலை​யில் 32 ஆயிரம் கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால், சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்பு கருதி ஒகேனக்​கல் அருவி​களில் குளிப்​ப​தற்கு தடை விதித்து தரு​மபுரி மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது. நடப்​பாண்டு முதல்​முறை​யாக மேட்​டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்​பியது.

டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. இதனால் அணை நீர்​மட்​டம் குறைவதும், காவிரியில் நீர்​வரத்து அதி​கரிக்​கும்​போது அணை மீண்​டும் நிரம்​புவது​மாக இருந்து வரு​கிறது. கடந்த செப்​டம்​ரபர் 2-ம் தேதி 6-வது முறை​யாக மேட்​டூர் அணை நிரம்​பியது. பின்​னர் அணை நீர்​மட்​டம் சற்று குறைந்​தது.

இந்​நிலை​யில், காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை காரண​மாக பாலாறு, தொப்​பை​யாறு, சின்​னாறு ஆகிய ஆறுகளில் நீர்​வரத்து அதி​கரித்​து, ஆற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு 30,000 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்​தது. அதிக நீர்​வரத்து காரண​மாக நேற்று முன்​தினம் மாலை மேட்​டூர் அணை முழு கொள்​ளள​வான 120 அடியை 7-வது முறை​யாக எட்​டியது.

இதையடுத்​து, அணை​யின் பாது​காப்பு கருதி 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்​டது. நேற்று மாலை அணைக்கு நீர்​வரத்து 35,000 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை நிரம்​பி​யுள்​ள​தால் 35,000 கனஅடி​ நீர் ஆற்​றில் வெளி​யேற்றப்படுகிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக 22,300 கனஅடி, 16 கண் மதகு​கள் வழி​யாக 12,700 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணை நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.

ஒரே ஆண்​டில் மேட்​டூர் அணை முழு கொள்​ளளவை 7 முறை​யாக எட்​டு​வது இதுவே முதல் முறை​யாகும். ஓராண்​டாக அணை நீர்​மட்​டம் 100 அடிக்கு மேல் நீடிப்​பது குறிப்​பிடதக்​கது. அணையி​லிருந்து அதிக அளவில் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், கரையோரப் பகு​தி​களை அதி​காரி​கள் கண்​காணித்து வரு​கின்​றனர். அதிக நீர்​திறப்பு காரண​மாக அணை மின் நிலை​யம் மற்​றும் கதவணை​கள் மூலம் மொத்​தம் 455 மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படு​வ​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x