Published : 20 Oct 2025 06:26 AM
Last Updated : 20 Oct 2025 06:26 AM
சென்னை: தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படம் இல்லாமலும் உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். தின்பண்டத்தின் பெயர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தரமில்லாத உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை அறிந்தால், 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT