Published : 20 Oct 2025 06:51 AM
Last Updated : 20 Oct 2025 06:51 AM
சென்னை: அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என மக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது.
மேலும் நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறி, லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம், மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்க வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும். மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக மின்னகத்தை “94987 94987” தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT