Published : 17 Oct 2025 07:29 AM
Last Updated : 17 Oct 2025 07:29 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை - தாம்பரம் இடையே முன்பதி வில்லாத மெமு விரைவு ரயிலில் இயக்கப்படுகிறது. இதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்பட்டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயிலில் ஒரு ஏசி சேர் கார் பெட்டியும், 11 சேர் கார் பெட்டிகளும், 4 பொது பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.
முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: சென்னை எழும்பூர் - மதுரைக்கு இன்றும் (17-ம் தேதி), நாளையும் (18-ம் தேதி) முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கும், நாளை இயக்கப்படும் சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கும் மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து அக்.18-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் புறப்பட்டு, அன்று இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை அடையும். இதுபோல, மற்றொரு முன்பதிவில்லாத ரயில் மதுரையில் இருந்து அக்.21-ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும். இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT