Published : 16 Oct 2025 05:54 AM
Last Updated : 16 Oct 2025 05:54 AM

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கும். சென்​னை, டெல்டா உள்​ளிட்ட 26 மாவட்​டங்​களில் கனமழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய பகு​தி​களில் இருந்து தென்​மேற்கு பரு​வ​மழை இன்று வில​கக்​கூடும். அதே​நேரம், தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​கள், மாஹே, தெற்கு உள் கர்​நாட​கா, ராயலசீ​மா, தெற்கு கடலோர ஆந்​திர பகு​தி​களில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கக்​கூடும்.

தென்​கிழக்கு அரபிக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய லட்​சத்​தீவு பகு​தி​களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக, வரும் 19-ம் தேதி வாக்​கில், தென்​கிழக்கு அரபிக்​கடல் மற்​றும் லட்​சத்​தீவு பகு​தி​களில், கேரள - கர்​நாடக பகு​தி​களுக்கு அப்​பால் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும்.

கடலோர தமிழகம் மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (அக்​.16) முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் (மணிக்கு 30-40 கி.மீ. வேகத்​தில்) லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 19 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று தேனி, தென்​காசி, திருநெல்​வேலி, ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, விருதுநகர், மதுரை, சிவகங்​கை, திண்​டுக்​கல், திருப்​பூர், கோவை, நீல​கிரி, ஈரோடு, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், சென்​னை, திரு​வள்​ளூர், கடலூர், புதுக்​கோட்​டை, டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி காரைக்​கால் பகு​தி​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

நாளை (17-ம் தேதி) சிவகங்​கை, ராம​நாத​புரம், மதுரை, விருதுநகர், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி தென்​காசி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், தேனி, திண்​டுக்​கல், திருப்​பூர், ஈரோடு, நீல​கிரி, கோவை, புதுக்​கோட்​டை, டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

18-ம் தேதி நீல​கிரி, கோவை, திருப்​பூர், ஈரோடு, சேலம், நாமக்​கல், கரூர், திருச்​சி, மாவட்​டங்​களி​லும், நீல​கிரி, கோவை, தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும், 20-ம் தேதி நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் மித​மான அல்​லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக சென்னை எண்​ணூரில் 14 செ.மீ. கத்​தி​வாக்​கத்​தில் 10 செ.மீ. மணலி புதுநகர், நீல​கிரி மாவட்​டம் கோட​நாட்​டில் 9 செ.மீ. சென்னை விம்கோ நகரில் 8 செ.மீ. மயி​லாடு​துறை மாவட்​டம் செம்​ப​னார்​கோ​விலில் 7 செ.மீ. சென்னை பெரம்​பூர், பேசின் பாலம், திரு​வொற்​றியூர், நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி, அழகரை எஸ்​டேட், புதுக்​கோட்​டை, கடலூர் மாவட்​டம் வான​மாதே​வி, ஈரோடு மாவட்​டம் மொடக்​குறிச்​சி, தூத்​துக்​குடி மாவட்​டம் வைப்​பாறில் 6 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x