Published : 14 Oct 2025 08:24 AM
Last Updated : 14 Oct 2025 08:24 AM
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என் தலைப்பில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார்.
முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக நயினார் நாகேந்திரன் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டப் பிரச்சாரப் பயணத்தை மதுரையில் தொடங்கி சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, சென்னை மத்தியம், பெரம்பலூர்,அரியலூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம்,தருமபுரி, திருப்பத்தூர்,தஞ்சை, புதுக்கோட்டை, ராம்நாடு, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் வழியாக நெல்லையில் நவ. 17ல் முடிகிறது. நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்கு டிஎன் 24- பிஏ- 7232 பேருந்தை பயன்படுத்துகிறார்.
இந்த பேருந்து பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, என் மண், என் மக்கள் யாத்திரைக்கு பயன்படுத்தியது ஆகும். நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணத்துக்காக அண்ணாமலை பயன்படுத்திய பேருந்தில் சிங்க முகம், காவி உடை திருவள்ளுவர், செங்கோல் மற்றும் பிரதமர் மோடி படம் தவிர்த்து மற்றவைகள் மாற்றப்பட்டுள்ளன. அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் படம் இடம் பெற்றுள்ளது.
பக்கவாட்டில் தஞ்சை பெரிய கோயில், வின்வெளி ஆராய்ச்சி நிலையம், துரந்தோ ரயில், மெட்ரோ ரயில், பாம்பன் பாலம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, வயல்வெளி மற்றும் பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இரு பக்கமும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம் என எழுதப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT